
முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி
முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்;தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் எல்லைப் பகுதியிலும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் எல்லைப்;பகுதியிலும் அமைந்துள்ள முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது என்றுமில்லாதவாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோதசெயற்பாடுகளை தடுக்க வேண்டிய மதுவரித்திணைக்களம் மற்றும் பொலிசார் உள்ளிட்ட அதிகாரிகளுகு;கு தகவல்கள் வழங்குகின்ற போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள பொதுமக்கள் குறித்த கிராமங்களில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள்உள்ளிட்;ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.