Category:
Created:
Updated:
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள பல்லவராயன் ;கட்டு கரியாலை நாகபடுவான் குமுழமுனை நொச்சிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கடந்த கால யுத்தம் காரணமாக கரையோரப்பகுதிகளில் காணப்பட்ட உவர் நீர்த்தடுப்பணைகள் சேதமடைந்தமை காரணமாக கடல்நீர் உட்புகுந்து கடந்த காலங்களில் விவசாயச் செய்கை நிலங்களாக காணப்பட்ட பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.இவ்வாறு உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்து உவர் நீர் உட்புகுந்தமையால் சுமார் ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் இவ்வாறு பாதிக்கப்;பட்டுள்ளன.கரையோரப்பகுதிகளில் சேதமடைந்த உவர் நீர்த்தடுப்பணைகள் புனரமைக்கப்படும் போது நாளடைவில் குறித்த நிலங்கள் பயிர்செய்கை நிலங்களாக மாற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.