
பெருமளவான விவசாய நிலங்கள் குளங்கள் விடுவிக்கப்படாமையினால் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் தமது விவசாயச்செய்கைகளை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள சுமார் பதினான்கு வரையான குளங்கள் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் சுமார் ஆயிரத்தி 89 இற்கும் மேற்பட்ட விவசாயக்குடுமப்ங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் பெருமளவான விவசாய நிலங்கள் குளங்கள் இதுவரை விடுவிக்கப்படாமையினால் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் தமது விவசாயச்செய்கைகளை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் வெலிஓயா கரைதுரைப்பற்று உள்ளடங்கலாக நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் அதிகளவான சிறிய குளங்கள் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அவை வனளத்திணை களத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.மக்கள் மீள்குடியேறி எட்டுஆண்டுகள் நிறைவடைகின்ற போதும், இதுவரை பல குளங்கள் விடுவிக்கப்படவில்லை.இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்படி ;06 பிரதேச செயலர் பிரிவுகளில் 14 வரையான குளங்கள் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதனால் 2179 ஏக்கர் விவசாய நிலங்களில்; விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதனால் சுமார் ஆயிரத்து 89 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.