பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி தாடி பாலாஜி மனைவியுடன் மொபைலில் பேசியுள்ள விடயம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி தாடி பாலாஜி மனைவியுடன் மொபைலில் பேசியுள்ள விடயம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி முதல் நபராக வெளியேறினார்.
இந்நிலையில் வெளியே வந்த சுரேஷ் தாத்தா, பாலாஜி மனைவியிடம் போனில் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்பொழுது உங்களது விவகாரம் எப்பொழுது ஆரம்பமானது... தற்போது எந்த நிலையில் உள்ளது... தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனா ஒரு விடயம் உங்ககிட்ட கூற வேண்டும் என்று போனில் கூறிய சுரேஷ் தாத்தா எப்படிம்மா அந்த ஆளுகூட குடித்தனம் நடத்துனீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் உண்மையில் உங்களுக்கு கோவிலே கட்டலாம்... ஒரு வாரம் தான் அவரிடம் பேசி பழகியுள்ளேன்... இங்கு ஒரு பேச்சு... அங்கு ஒரு பேச்சு... என்னாலேயே தாங்கமுடியவில்லை... அவ்வளவு விஷமாக உள்ளார் என்று நித்யாவிடம் பாலாஜியை தாறுமாறாக பேசியுள்ளார்.
இதனையெல்லாம் கேட்ட நித்யா... கடைசியில் ஆண் போட்டியாளர்களில் பாலாஜி விஷம் என்றால் பெண் போட்டியாளர்களில் யார் விஷம் என்று கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் தாத்தா சடாரென அனிதாவின் பெயரைக் கூறியுள்ளார்.