கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக எல்லையை கடக்க முற்பட்ட இந்திய குடும்பம்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மனிசோடாவில் உள்ள பகுதியை பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்களிடம் பணம் பெற்று அமெரிக்க எல்லைக்கு காரில் கொண்டு செல்ல சில கும்பல் முயற்சிக்கிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது குளிர் காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 4 இந்தியர்கள்; இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 20ம் தேதி அமெரிக்க எல்லையான எமர்சன் அருகே ஒரு குழந்தையின் உடலும், 3 உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆட்களை கடத்தி வந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க போலீசார் நேற்று கைது செய்தனர். இவருக்கும் உயிரிழந்த 4 இந்தியர்களுக்கும் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: கனடா-அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். இதில் பெரும் ஆபத்துகள் உள்ளன.