Category:
Created:
Updated:
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது. புதிய தொழில்நுட்பத்தோடு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை தயாரித்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 11 ஆம் தேதி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணையானது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.