
கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது.
கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது. குறித்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தி்ம் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிதிகள் விழா இடம்பெறம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதை தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது.கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள், யாழ் இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அதிபர்கள், பிரதேச சபை செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.தொடர்ந்து யாழ் இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாள் ஆகியோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.