
ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட பெண்
பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரின் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏராளமானோர் ரெயிலுக்காகக் காத்திருக்கிறார்கள். அப்போது ரெயில்நிலைய நடைமேடையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணை, பின்னாலிருந்து வரும் ஒரு நபர், தண்டவாளத்தை நோக்கி தள்ளிவிடுகிறார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த அப்பெண், எவ்வித எதிர்ப்போ, தற்காப்பு முயற்சிகளோயின்றி தண்டவாளத்தில் பொத்தென்று விழுகிறார்.
அவர் விழுந்த அந்த வேகத்திலேயே அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது குறித்து எந்த தகவலும் இல்லை. அவ்வளவுதான் கண் இமைக்கும் நேரத்தில், அவளருகே அவர் எதிர்பார்த்துக் காத்து நின்ற மெட்ரோ ரயில் வந்துவிட்டது. நல்ல வேளை அந்த ரயிலின் அவசரகால பிரேக்குகள் வெகுச் சிறப்பாக வேலை செய்ததால், அப்பெண்ணுக்கு மிகவும் அருகாமையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, ஓடிய நபரை காவல்துறையினர் வெகு கண்டுபிடித்துகைது செய்தார்கள். ஆனால், இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.