
முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்
தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக இந்த பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
டொம்லின் பூங்காவின் நினைவு பலகையை பிரதமர் திறந்து வைத்தார். பிரதமர் அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முதன்மை ஆலோசகர் எம்.எம்.ஜே.இ.ஜி.பண்டார விளக்கமளித்தார்.
யாத்திரிகர்கள் இளைப்பாறுவதற்கு அறைகள், சுகாதார வசதிகள் மற்றும் 16 விற்பனை நிலையங்களை கொண்ட டொம்லின் பூங்காவை நிர்மாணிப்பதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செலவான தொகை 374 மில்லியன் ரூபாயாகும்.
அதனை தொடர்ந்து சஹஸ் உயன ´நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா´-இற்கு விஜயம் செய்த பிரதமர் அதன் நினைவு பலகையை திறந்து வைத்தார். திறந்தவெளி அரங்கு, கைவினைப்பொருட்கள் கட்டிடத்தொகுதி, உணவருந்தும் பகுதி மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் கொண்ட இந்த பூங்காவில் ஓய்வெடுக்கும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 531 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற வாகன நிறுத்துமிட பூங்கா ஏற்கனவே இந்த வாகன நிறுத்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.