Category:
Created:
Updated:
கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் கடந்த காட்டுயானைகளின் அட்டகாசம் காணப்படுகிறது.நேற்று குறித்த பகுதியில் அருவடைக்குத் தயாராகவிருந்த 1800 மரவள்ளிகள் இரவு 1.00 மணியளவில் 4 நான்கு காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது.குறித்த யானைகள் அதிகாலை 4.00மணிவரை தமது வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்ட மரவள்ளி, வாழை, தென்னைமரம் என்பனவற்றை முற்றாக அளித்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தினை முற்றாக அழித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக கிராமசேவையாளர் மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலர் மற்றும் வனஜீவராசிகள் தினைக்களம் என பலருக்கும் தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர் .