
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல் விழா
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல் விழாவும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வடமாகாண பொங்கல் விழாவும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இந்திய துணைத்துாதரகத்தின் பதில் துாதுவரின் பங்குபற்றுதலுடன் இன்று (16-01-2022)நடைபெற்றுள்ளனகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102 வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல் நிகழ்வும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் வடமாகாண பொங்கல் விழாவும் இன்று(16-01-2022) காலை 8.30 மணிக்கு நடைபெற்றுள்ளன. நிகழ்வின் முன்னதாக இரணைமடு நீர் தேக்கத்தின் கீழுள்ள வயலில் அறுவடை செய்த நெல் கதிர் கனகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பொங்கல் விழா ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் இந்திய துணை தூதரகத்தின் பதில் துாதுவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் திருலிங்கநாதன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.