Category:
Created:
Updated:
இஸ்ரேல் நாட்டில் 39,015 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 17,68,135 ஆக உயர்ந்து உள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 8,303 ஆக உயர்ந்து உள்ளது. 387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் நிதி மந்திரி அவிக்டோர் லீபர்மேனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள அவர், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறார். மந்திரி நலமுடனேயே உள்ளார் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்து உள்ளது.