
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் 48 பாடசாலைகளும் எதுவித போக்குவரத்து வசதிகளம் அற்ற பாடசாலைகள்
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 62 பாடசாலைகளில் 14 பாடசாலைகள் தவிர ஏனைய 48 பாடசாலைகளும் எதுவித போக்குவரத்து வசதிகளம் அற்ற பாடசாலைகளாக காணப்படுவதனால் மேற்படி பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் வரை தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை ஆசிரிகள் இன்மை, எனப்பல்வேறு நெருக்கடிகளால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்புக்களாலும் சுட்டிக்கட்டப்பட்டு வருகின்றது.குறிப்பாக, துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 62 பாடசாலைகளில் 14 பாடசாலைகள் மாத்திரம் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட பாடசாலைகாளக காணப்படுகின்றன.ஏனைய 48 பாடசாலைகளும் எந்தவித பொதுப்போக்குவரத்துக்களும் மற்ற பாடசாலைகளாக காணப்படுகின்றன எனவும் இதனால் தூரப்பிரதேசங்கள் உள்ள மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதுடன், இவ்வாறு போக்குவரத்துக்கள் இல்லாத பகுதி பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைக் கொண்டு சேர்ப்பதிலும் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் வலயக்கல்வி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்கவரத்து வசதிகள் இல்லாத 48 பாடசாலைகளிலும் கல்வி கற்றுவருலும் மாணவர்களின் 90 வீதமான பெற்றோரிகள் தினக்கூலி செய்யும் வருமானமற்ற குடும்பங்களாகவும் 10 வீதமானவர்களே விவசாயிகளாகவும் காணப்படுகின்றனர் என்றும் இவ்வாறான நிலையில் இந்த மாணவர்களின் கல்வி தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறை காட்ட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.