
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக கொள்கலன்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு துணுக்காய் கால்நடை கூட்டுறவு சங்கம் ஊடாக பால் சேகரிக்கும் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.உலக உணவுத்திட்டத்தினால் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுவரும் R5N செயற்திட்டப் பயாளிகளுக்கு பண்ணை முறையிலான கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக பால் சேகரிக்கும் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டது .
KOICA நிறுவனத்தின் நிதிஅனுசரனையில் உலக உணவுத் திட்டம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலகம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும் இணைந்து குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதனூடாக துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவைச்சேர்ந்த 140 மாட்டுப் பண்னையாளர்களுக்கு ரூபா 1,160000.00 பெறுமதியிலான 140 சில்வர் ரக கொள்கலன்கள் வழங்கிவைக்கப்பட்டது.இச் செயற்றிட்டமூடாக சுகாதர முறையுடன் சிறந்த தரமுள்ள பாலை சேகரித்து சந்தைப்படுத்தலில் ஈடுபடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் , துணுக்காய் பகுதி கால்நடை வளப்போர் கூட்டுறவு சங்க தலைவர் கோணேஸ்வரன், மாவட்டச்செயலக முகாமைத்துவ அலகின் உலக உணவு திட்டங்களுக்கான பணிப்பாளர் திருமதி.பவானி கணேசமூர்த்தி, துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா, பிரதிப்பணிப்பாளர் கிரிஜகலா, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள மாவட்டபிரதிப் பணிப்பாளர் வைத்தியர் Dr.மரியாதுரம், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோனேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், துனுக்காய் கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைஉலக உணவுத்திட்ட உப அலுவலகப் பணியாளர் திரு. வ.கஜானனன் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பண்ணையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.