Category:
Created:
Updated:
கிளிநொச்சியில் அமைந்துள்ள சின்மயா மிஷன் ஏற்பாட்டில் இன்று (12-01-2022) 40 குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளனஎதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்களாக 40 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.மேற்படி நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு சின்மயா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் சின்மயா மிஷன் சிவேந்திர சயித்தன்யா சுவாமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கண்டு பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.