
கிளிநொச்சியில் எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சி தலைவர் கிளிநொச்சியில் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இன்று காலை பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திற்கு சென்றிருந்த அவர் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தும்மினி விகாரைக்கு சென்று அங்கு மத வழிபாட்டில்ஈடுபட்டிருந்தார். குறித்த வழிபாட்டினை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் வளர்ச்சிக்காக செயற்படும் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.குறிதத் நிகழ்வுகளில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க, எதிர்கட்சி தலைவரின் செயலாளர் உமாச்சாந்திரா பிரகாஸ், கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜன்,மாவட்ட அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.