
7 மாதமாக அலைய வைக்கும் போலிஸார் - கதறும் பெற்றோர்
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது வீட்டு வாசற் தளத்துக்கு முன்பாக கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு இம்மாதம் 21 ஆம் திகதி வரை கொளையாளியை மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தையினர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளனர்,
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற படுகொலையை சம்பவத்தினை ஏராவூர் பொலிஸார் விசாரணை செய்து அறிக்கைகள் வழங்கப்படாத காரணத்தினால் மீண்டும் குறித்த துப்பாக்கிச்சூடு விசாரணையை கரடியனாறு பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தாங்கள் அலைந்து திரிவதும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்றைய தினம் கௌரவ நீதிபதி, துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்தில் எந்த துப்பாக்கியால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸாரிடம் வினவியபோது பொலிஸாருக்கு எந்த துப்பாக்கியால் சுட்டது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது கோபமடைந்த பாலசுந்தரத்தின் தந்தை துப்பாக்கி எதுவென்று தெரியாத ஒருவருக்கு எவ்வாறு துப்பாக்கியை வழங்கினார்கள் என்பது வேதனை குறிய விடயம்இதனால்தான் இவ்வாறான சம்பவம் நடைபெறுகின்றது.
கைத்துப்பாக்கியால் சுட்டாரா அல்லது பெரிய துப்பாக்கியால் சுட்டாரா அல்லது கைக்கொண்டால் சுட்டார் என்று கூட தெரியாத அளவுக்கு மட்டக்களப்பு பொலிஸார் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வேதனை அளிப்பதாகவும் தங்களது மகனது கொலைக்கான நீதியை மறைப்பதற்கு பொலிஸார் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.