Category:
Created:
Updated:
தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், உரப் பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், உரிய நேரத்தில் இரசாயன உரங்கள் கிடைக்காததால் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.