
காட்டுயானைகளின் தொல்லை அச்சத்துடன் வாழும்நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பனங்காமம் மூன்றுமுறிப்புப்பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் தாங்கள் அச்சத்துடன் வாழும்நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பனங்காமம் மூன்றுமுறிப்பு ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் தமது வாழ்வாதாரத்தொழிலான விவசாயத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அண்மைய நாட்களாக இந்தப்பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.அதாவது இரவு வேளைகளில் பயிர்செய்கை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வரும் அதேவேளை குடியிருப்பு காணிகளிலும் உள்ளதென்னை வாழை பலா போன்ற மரங்களையும் அழித்து வருகின்றன.தற்போது வீடுகளுக்குள் நுழையும்அளவிற்கு இதன் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளது என்றும் இதனைக்கட்டுப்படுத்த தமது கிராமங்களைச் சுற்றி யானை வேலிகளை அமைத்துத் தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை நேற்றிரவு (03-01--2022) காட்டுயானைகள் புகுந்து அதிகளவான பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளதாகவும் இந்தக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.