Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 35 வேலைத்திட்டங்கள் 86.09 மில்லியன் ரூபா செலவில் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்படி 35 வேலைத்திட்டங்கள் 86.09 மில்லியன் ரூபா செலவில் 2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுகடந்த நவம்பர் மாதம் 30ம் திகதிவரையான காலப்பகுதியில் 20 வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் ஏனைய வேலைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேற்படி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது-(கிளிநொச்சி நிருபர்)