
கண்டாவளை பிரதேசத்திலுள்ள கரையோரப் பகுதிகளில் உவர் நீர் தடுப்பணைகள் இல்லாத வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாற்றமடைந்து வருகின்றன
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 16 கிலோமீட்டர் வரையான கரையோரப் பகுதிகளில் உவர்நீர்த் தடுப்பணையின்மையால் பெருமளவான வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருவதாகவும் உவர் நீர்த்தடுப்பனை அமைத்து தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திலுள்ள கரையோரப் பகுதிகளில் உவர் நீர் தடுப்பணைகள் இல்லாத காரணத்தினால் கடல்நீர் உட்புகுந்து பெருமளவான வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாற்றமடைந்து வருகின்றனகுறிப்பாக ஆரம்ப காலத்தில் இருந்து பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த காணிகள் இவ்வாறு உவர் நிலங்களாக மாறி இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்கட்டியுள்ளனர்குறித்த பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வாறு உவர் பரம்பலுக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் தங்களுடைய பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுமார் 16 கிலோமீட்டர் நீளமான பகுதி கடற்கரையோரப் பகுதிகளாக கானப்படுகின்றன என்றும் இப் பகுதிகளுக்கு உவர்நீர்த் தடுப்பணைகளை விரைவாக அமைத்துத் தருமாறு கோரியுள்ளனர்இவ்வாறு சுமார் 16 கிலோமீட்டர் நீளமான உவர்நீர்த் தடுப்பணை அமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட உயர் நிலை அதிகாரிகளிடம் கண்டாவளை பிரதேச விவசாயிகளால் குறித்த கோரிக்கையானது கடந்த 28ம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது