Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இருபத்தொரு பேருக்கான காணி ஆவணங்களை வழங்கும் நடமாடும் சேவை இன்று பகல் ஒன்பது முப்பது மணிக்கு நடைபெற்றுள்ளது.மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா நவரட்ணம் மற்றும் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் திணைக்கள அதிகாரிகள் குறித்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டிருந்தன.ர் குறித்த பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான காணி நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.