கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 84% பேருக்கு ஒமிக்ரோன்
தில்லியில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமிக்ரோன் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.ஒமிக்ரோன்வகை கொரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தில்லியில் 351 பேர் இதுவரை ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையான கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் சத்யேந்திர ஜெயின் பேசுகையில்,தில்லியில் கடந்த 2 நாள்களாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4,000 பேர் வரை கொரோனா உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொற்று உறுதியாகும் விகிதம் 6.5 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். தற்போது 202 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமிக்ரோன் வகை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.