Category:
Created:
Updated:
பெருந்தோட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் விசேட விலைக்கழிவு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி மாதாந்தம் கிலோ ஒன்று 80 ரூபா என்ற விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
மேலும், அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.