
அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் அதிவேகத்தில் பரவி வருகிறது.
உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1.85 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
விடுமுறையில் வீட்டில் இருந்தபோது அறிகுறிகள் தென்பட்ட போது சோதனைக்குக் கோரினேன். அதில் எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனது குடும்பநல டாக்டரின் வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.