
மூன்றாவது பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 1.4 விதமானோர் மாத்திரம் மூன்றாவது பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் covid -19 தடுப்பூசிஏற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றனஇந்த மூன்றாவது ஊசியினை 1.4 வீதமான மக்கள் மாத்திரமே பெற்றுள்ளனர். அதாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் பலர் ஆர்வங் காட்டவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்த போது கடந்த காலத்தில் போடப்பட்ட ஊசிகள் கிராம மட்டங்களில் சென்று போடப்பட்டது. அது போலவே வீடுகளுக்குச் சென்று போடுவதையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் குறித்த ஊசியை அவ்வாறு வழங்க முடியாது ஒரே தடவையில் ஆறு பேருக்கான ஊசி ஏற்ற வேண்டும் கிராமங்களிலே கொண்டுசென்று போடுவதற்கு குளிரூட்டி வசதிகள் இல்லை அத்துடன் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது.ஆகவே தற்போது வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை போன்றவற்றிலும் இந்த ஊசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டவர் மாவட்டத்திலேயே 81 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளனர் 66 வீதமான மக்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றிருக்கிறார்கள் மூன்றாவது தடுப்புசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இதுவரை 1.4 வீதமானவர்கள்மாத்திரமே இதனைப் பெற்றுள்ளனர்.அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்புசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 53 வீதமான மாணவர்கள் தடுப்புசிகளை ஊசிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்