Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.விபத்தை அடுத்து அங்கு திரண்ட மக்கள் டிப்பர் வாகனச் சாரதிக்கு எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.