
கரும்புள்ளியான் கிராமத்தில் 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சௌபாக்கியா உற்பத்திக் கிராமம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மக்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலாக அமைக்கப்பட்ட சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் கையளிக்கப்பட்டுள்ளது..இதனூடாக தேங்காய் எண்ணை, உழுந்து, அரிசி மா, ஒடியல் மா மற்றும் பால்சார் உற்பத்திப் பொருட்கள் போன்றதான உள்ளுர் மூலப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கிலும், உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான சிறந்த முறையில் சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இச் செயற்றிட்டத்தினூடாக 59 தனிநபர் உற்பத்தியாளர்களும் இதனுள் சிறு உற்பத்தியாளர்கள்,கால்நடை வளர்ப்போர்,விவசாய உற்பத்தியாளர்கள் எனவும். வெவ்வேறு இரு குழுக்களைச் சேர்ந்த 20 பயனாளிகள் சத்துமா தயாரித்தலிலும்,20பயனாளிகள் பால் சார் உற்பத்தியாளர்களுமாக 99 உள்ளுர் உற்பத்தியாளர்கள் நன்மையடைவுள்ளனர் .இந் நிகழ்வில் சௌபாக்கியா அபிவிருத்திப் பணியகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ராமமூர்த்தி, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி.வில்வராஜா, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.முபாரக், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வி.கிருபாசுதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஜே.வோல்டி சொய்சா, கணக்காளர் கு.சஜீவன், திட்டத்துடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், மாவட்ட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் தி.யோகேந்திரன், கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,விவசா போதனாசிரியர்,கிராமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், விவசாயிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.