
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் கால போக நெற்செய்கைகளை அழித்து வரும் காட்டு யானைகள்
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக நெற்செய்கைகளை காட்டு யானைகள் அழித்து வருவதாகவும் இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வன்னேரிக்குளம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டவன்னேரி குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலப்போக பயிர் செய்கைகளை காட்டு யானைகள் தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.
நாளாந்தம் இரவு வேளைகளில் மாலை 5 மணிக்கே குறித்த பிரதேசங்களுக்கு வருகின்ற பெருமளவான காட்டு யானைகள் இவ்வாறு நெற்பயிர்களை அழித்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளவிவசாயிகள் குடியிருப்பு காணிகளிலும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.எனவே வன்னேரிக்குளம் பகுதியில் யானை வேலிகளை அமைத்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ள போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறித்த பிரதேசங்களுக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.