ஒரு ஆளுமையற்ற தலைமையைக் கொண்டு வந்தமைக்கு நாங்கள் வெட்கப்படுகின்றோம்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு ஆளுமையற்ற தலைமையைக் கொண்டு வந்தமைக்கு நாங்கள் வெட்கப்படுகின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமான இராஜ்குமார்-சிந்துஜன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாந்தை கிழக்கு பிரதேச உபதவிசாளருமான சிந்துஜன் கருத்துத் தெரிவிக்கும் போது முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் தவிசாளர் பெருமளவான காணிகளை அடாத்தாக ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அந்த காணிகளுக்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இவ்வாறு காணிகளை ஆக்கிரமித்தள்ளமை மற்றும் அரசியல் செல்வாக்கில் சட்ட ரீதியற்ற ஆவணங்களை பெற்றுள்ளமை தெடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை கூட இடம்பெறுகின்றது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் இது மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளாகும் அத்தோடு அதிகாரிகள் மீது சேறு பூசுகின்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.இதே வேளை பெருமளவான காணிகளை பொதுமக்களுக்கு வழங்குவதாக துப்பரவு செய்து அவற்றை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காக சில அதிகாரிகள் மீது சேறுபூசும் இந்த நடவடிக்கைய முன்னெடுத்திருக்கின்றார்.
அன்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தங்களுடைய காணிகளுக்கு ஆவனங்களை பெறுவது தொடர்பிலேயே கதைத்தார்களே தவிர வனவள திணைக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து காணியற்ற மக்களுக்கு வழங்குவது தொடர்பில் எதனையும் பேசவி்ல்லை இவர்களின் போலி ஆவணங்களுக்கு சட்டத்தரணி சுமந்திரன் சரியான கருத்தை கூறியிருந்தார் என்றும் கட்சியின் செயற்பாட்டாளரும் சிவபுரம் சனசமூக நிலையத்தின் தலைவருமான வி.தியாந்தன் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.