Ads
மல்லாவி பொலிஸ்பிரிவிற்குற்பட்ட அனிஞ்சியன்குளம் 2ம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மல்லாவி பொலிசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்
மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளான லக்மல் குமார மற்றும் லசந்த விதாரண ASP-1 ,திசநாயக, பொலிஸ் உத்தியோகத்தர்களான பகீரதன், இளவரசன், றுசாந்த ,விஜி இணைந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 95 லீற்றர் கோடா மற்றும் 50 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியை சேர்ந்த 51 வயதான குடும்பஷ்தர் ஒருவரும் கைதாகியுள்ளார்.கைதான குடும்பஸ்தரை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஐர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மல்லாவி பொலிசார் தெரிவித்துள்ளனர்
Info
Ads
Latest News
Ads