பெருமளவான வயல் காணிகளை கிராம அலுவலர் மற்றும் தவிசாளர் ஆகியோர் அரசியல் செல்வாக்கில் அடாத்தாக ஆக்கிரமிப்பு - மக்களால் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் குளம் மற்றும் உழுவனேரிக்குளம் ஆகியவற்றின் கீழ் பெருமளவான வயல் காணிகளை கிராம அலுவலர் பெருமளவான வயல் காணிகளை கிராம அலுவலர் மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அடாத்தாக ஆக்கிரமித்து இருப்பதாக பிரதேச மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் குளத்தின் கீழ் உள்ள சுமார் 18 ஏக்கர் வயல் காணிகள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் ஆக்கிரமிக்கப்பட்டு பயிர் செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்இதேவேளை எருவில் குளம் உழுவனேரிக்குளம் சிறாட்டிகுளம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக காணிகளை துப்பரவு செய்யப்படுவதாக தெரிவித்து குறித்த காணிகள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் மேற்படி காணிகளை தவிசாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் ஆக்கிரமித்து தொடர்ந்து பயிர் செய்கை மேற்கொண்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்குறிப்பாக இந்த பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் காணிகள் இல்லாத நிலையில் அவர்களுக்கான வயல் காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இவ்வாறு துப்பரவு செய்த காணிகளை பெருமளவில் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகளுக்கான உரிமைகளைக் கோரி வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனரஆகவே குறித்த பிரதேசங்களில் இருக்கின்ற காணிகளை தங்களுக்கு பகிர்ந்தளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்