வீதி கடவை இன்மையால் பணியாளர்கள் மாணவர்கள் என பலரும் வீதியை கடப்பதற்கு பாரிய அசெளகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிளிநொச்சி ஏ-09 வீதியின் நைடா மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு இடைப்பட்ட பகுதியில் வீதி கடவை இன்மையால் பணியாளர்கள் மாணவர்கள் என பலரும் வீதியை கடப்பதற்கு பாரிய அசெளகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.கிளிநொச்சி ஏ-09 வீதியின் நைடா மற்றும் கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனைக்கு இடைப்பட்ட பகுதியில் வீதிகடவை இன்மையால் பணியாளர்கள் மாணவர்கள் என வீதியை கடப்பதற்கு பாரிய அசெளகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.இவ் வீதியில் அதிகமான வாகனங்கள் பயணிப்பதாலும் வீதி கடவை இன்மையாலும் வீதியை ஊடறுத்து பயணிக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. நைடாவில் அநேக மாணவர்கள் கற்றுவருவதோடு வலயகல்வி பணிமனைக்கும் தினமும் சேவைக்காக பாடசாலை சமூகத்தினர் மாணவர்கள் என வருகின்ற நிலை காணப்படுகின்றது இவ் பகுதியில் வீதியை கடப்பதென்றால் வைத்தியசாலை கடந்தும், மத்தியகல்லூரியின் ஆரம்ப வித்தியாலயத்தின் அருகிலும் மட்டுமே வீதிகடவை காணப்படுவதால் குறித்த பகுதியில் வீதிகடவையினை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றனர். இவ் நிலையங்களுக்கு அருகில் மின்சாரசபையின் மக்கள் சேவை அலுவலகமும் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது