Category:
Created:
Updated:
பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரபொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் 'ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு தொழில் முயற்சியாளரை உருவாக்கும் திட்டத்தின்' கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இயந்திர உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (28-12-2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய காதர் மஸ்தான் அவர்கள், பிரதேச செயலாளர், சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், மாவட்ட விதாதா அலுவலர், துணைத் தவிசாளர், அரசியல் கட்சிகள் சார் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.