Ads
“ஒரே நாடு, ஒரே சட்டம்” செயலணியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
அனைத்து இன மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரமளிக்கும் சட்டக் கட்டமைப்பின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வருகை தந்திருந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியிடம் தமது கருத்துக்களை முன்வைத்துப் பேசிய சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அறக்கட்டளையின் பிரதிப் பணிப்பாளர் ஜே.தியாகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு பலமுறை திருத்தப்பட்டது. அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அனைவரையும் சமமாக நடத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தியாகராஜா வலியுறுத்தினார்.
Info
Ads
Latest News
Ads