சினிமா செய்திகள்
பிக்பாஸ் விக்ரமன் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்
ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைப்பேன் - ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு
 ‘பிளடி பெக்கர்’ படம் படுதோல்வி
தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோட
 விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்தும் அவரது கருத்துகள் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், "லாரியில் அடிபட்ட
சிறுவனிடம் ஏமாந்த நிவேதா பெத்துராஜ்
நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’பொதுவாக எம்மனசு தங்கம்’ உட்பட சில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர். இவர் தற்போது
அவர்களிடம் அவ்வளவு கெஞ்சினேன் என மனம் திறந்து பேசிய சமந்தா
நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்றார்கள். சமந்தாவை பிரிந்த பி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஸ்ரீதர் அப்போது இயக்குநர் இல்லை. அவர் ஒரு கதாசிரியர். கதை வசனம் எழுதுபவர். பல திரைப்படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதிவந்த நிலையில், திடீரென சேலம் மாடர்
தளபதி 69 படத்தில் இருந்து விலகினார் சத்யராஜ்
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவ
காத்திருந்த எம்.ஜி.ஆர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது படத்தில் பாடல் பாட வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர் 15 நாட்கள் தனது படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்தார் என்பது பலரும் அற
ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன்
இன்று அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று சொத்துக்காக அடித்து கொள்ளும் இந்த காலத்தில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சு
நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலா போட்ட கண்டிஷன்
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகைய
விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் பதிலடி
தவெக மாநாட்டை தொகுத்து வழங்கியவர் துர்கா தேவி(28). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. விஜயின் ரசிகையாக இருந
Ads
 ·   ·  8010 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ம் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது.

இந்த ஒமைக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமைக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் இதுபற்றி கூறும்போது, “ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்பு சொல்கிறது” என குறிப்பிட்டார்.

இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு தகவல்கள் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருப்பதால், இவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 590
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads