ஒமிக்ரான் பாதிப்பு; 11,500 விமானங்கள் ரத்து
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரானால் விமான நிறுவனங்கள் மீண்டும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியுள்ளன. பல நாடுகளில் ஏற்கனவே சில நாடுகளில் இருந்து விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் விமான சேவைகளும் ஒமிக்ரான் பாதிப்பால் ரத்தாகி வருகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு முதல் நாள் என கடந்த மூன்று நாட்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரை உலகம் முழுவதிலும் 11,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்காவில் விமான ஊழியர்களுக்கு ஒமிக்ரான் உறுதியானதால் 200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை சீனா மற்றும் அமெரிக்கா சார்ந்த விமான நிறுவனங்களுடையவை என கூறப்பட்டுள்ளது.