கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து வீதி விபத்துக்களை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து மாவட்ட அரச அதிபர் தலைமையில் இன்று. 26-12-2021) விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்களால் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் பலர் அங்கவீன மடைகின்ற நிலையும் கானப்படுகின்றன இந்த நிலையில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் பாதசாரிகள் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த அடிப்படையிலே இன்றைய(26-12-2021) தினம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இலங்கைசெஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து வீதி விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஏ-09 வழியாக கிளிநொச்சி பொதுச்சந்தை வரை சென்று பொதுச்சந்தை வளாகத்திலும் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.