Ads
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கான வணக்க நிகழ்வும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் (26-12-2021) நடைபெற்றுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதன் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.இதனையொட்டி இன்று பகல் 9.27 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கான வணக்க நிகழ்வும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் நடைபெற்றுள்ளன.தேசியக் கொடி ஏற்றப்பட்டதையடுத்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாநாட்டு மண்டபத்தில் அனர்த்த செயற்பாடுகள் தொடர்பான கையேடு ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.இதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் அனர்த்த முகாமைத்து பிரிவினர் எனப்பலர் கலந்து கொண்டனர்
Info
Ads
Latest News
Ads