ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு ஒமைக்ரான் வார்டு
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த மாதம் தொடக்கத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆக்சிஜன் வசதியுன் 1,522 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 550 படுக்கைகளும் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 136 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் ராஜீவ் காந்தி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள ஆக்ஸிஜன் சேமிப்பு கிடங்கு , 24 மணிநேர கொரோனா தடுப்பூசி மையம் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளையும் அவர் ஆய்வு செய்தார்.
108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையையும் ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வசதிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.