Ads
கேரளாவில் புதிதாக 1,824 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 1,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 லட்சத்து 23 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3 ஆயிரத்து 364 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்து 65 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 ஆயிரத்து 691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 268 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38,929 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads