சிவாஜியை,ஜெயலலிதா மதிக்கவில்லை என்ற ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக் கூடிய நல்ல மனிதர். அவர் நிறைய தருணங்களில் அதை நிரூபித்து உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்று மேடையிலேயே பலமுறை ரஜினி சுட்டிக்காட்டி உள்ளார்.
1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்தை உருவாக்கியிருந்தார். அதற்கு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி என பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த திறப்புவிழாவில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம், நடிப்புக்கு இலக்கணமான சிவாஜி கணேசனுக்கு மேடையில் இடம் கொடுக்கவில்லை.
வேறு எந்த நடிகராக இருந்தாலும் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் சிவாஜி பெருந்தன்மையுடன் இவ்விழாவில் பங்கு பெற்றார். உலகில் மிகச்சிறந்த நடிகரான சிவாஜி கணேசனை, ஒதுக்கியது திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்தது.
சில ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவை ஜெயலலிதா தலைமை ஏற்று நடத்தினார்.
இந்தியாவில் எந்த ஒரு நடிகருக்கும் இதற்கு முன் இந்த மாதிரி ஒரு விழா நடந்தது கிடையாது. அவ்விழாவில் ரஜினி பேசிய போது, சிவாஜி கணேசனுக்கு பிலிம் சிட்டி திறப்புவிழா மேடையில் இடம் கொடுக்காததை கண்டித்தார். அதற்கு அனைவரும் ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஜெயலலிதாவை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கும் காலத்தில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்ற ரஜினியின் பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரஜினி இந்தப் பேச்சைக் கேட்ட ஜெயலலிதா மிகுந்த கோபம் அடைந்து அதன்பின் அவருக்கு பல பிரச்சினைகள் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.