CINEMA

Followers
Empty
Membership
Standard
Info
Who can post to my profile:
Array
Organization Name:
CINEMA
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 161

4841 point(s) to reach
Comments (0)

    சினிமா செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள்.

    Members
    Joined Organizations
    CINEMA
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Added a news 
    பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.பாபநாசம் படத்திற்குப் பிறகு இவர் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் மட்டுமின்றி பல தகவல்களையும் ரசிகர்களிடம் தெரிவித்து வருவார். அதனால் இவரின் சமூக வலைத்தள பக்கத்தை பார்க்க பல ரசிகர்கள் உள்ளனர்.எஸ்தர் அனில் அவ்வப்போது மற்ற நடிகைகள் போலவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம எஸ்தர் அனிலா இவ்வளவு அழகாக உள்ளார் என கூறி வருகின்றனர்.
    • 992
    Added a news 
    பிக்பாஸ் வீட்டில் அமீர் தான் சிறு வயதில் பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.  போட்டியாளர்கள் உட்பட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.அமீருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அமீர் தன் தாயை இழந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி சொந்தமாக ஒரு டான்ஸ் ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார்.நடன வகுப்பில் முதலாவதாக சேர்ந்த குழந்தை அலைனா. அலைனா தான் தன்னுடைய வாழ்க்கையை திருப்பி போட்ட குழந்தை என்று அவர் கூறினார். மேலும் தனியாக வாழ்ந்து வந்த தன்னை அந்த குழந்தையின் அப்பா அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று மிகவும் நன்றாக பார்த்து கொண்டதாக தெரிவித்தார.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த எபிசோடுக்கு பிறகு அமீருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. அமீரை தன் சொந்தமாக பார்த்துக் கொண்ட அந்த குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வந்த அமீர், பாவ்னியை நம்ப வேண்டாம் என்று ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தனக்கு ஒரு பிரச்சனை என்றால் பாவ்னி யாரையும் மாட்டிவிட தயங்க மாட்டார் என்றும், அபிநய்க்கு வந்த நிலைமை உங்களுக்கு வந்து விடக்கூடாது என்றும் கூறுகின்றனர்.அமீர் தன்னுடைய அம்மா கணவன் இல்லாமல் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை சிறு வயதிலிருந்தே பார்த்த காரணத்தால் தான் கணவரை இழந்த பாவ்னியின் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு வந்திருக்கிறது. இது ஒருபுறம் பாராட்ட வேண்டிய விஷயம் என்றாலும். அமீரின் இந்த நேசத்திற்கு பாவ்னி ஏற்றவர் இல்லை.பிக்பாஸ் வீட்டில் நிறைய முறை அவர் தன்னை நம்பும் பலரை சிக்கலில் மாட்டி உள்ள நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம். இதை ஒரு முறை ராஜு அனைவரின் முன்பும் கூறியிருக்கிறார். அப்படியிருக்க அமீர், பாவ்னியை இந்த அளவு நேசிப்பது வேண்டாம் என்று பலரும் அவரை எச்சரிக்கின்றனர்.
    • 949
    Added a news 
    மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சிவகார்த்திகேயன், விஷால், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளர்.கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு வராது என்று பலரும் கூறிய நிலையில் அந்தப் படம் வெளியான பிறகு அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினர்.அதற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் பல திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த திரைப்படம் பல கோடி வசூலை பெற்று அவருக்கு புகழைத் தேடித் தந்தது.இதனால் சில காலங்கள் பட வாய்ப்புகள் குறைந்திருந்த கீர்த்தி சுரேஷிற்கு தற்போது மார்க்கெட் அதிகரித்துள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைய இருக்கும்  படத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 66. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக உருவாகிறது. இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க படக்குழு கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர்.கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
    • 1060
    Added a news 
    ரஜினிகாந்த் தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக் கூடிய நல்ல மனிதர். அவர் நிறைய தருணங்களில் அதை நிரூபித்து உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்று மேடையிலேயே பலமுறை ரஜினி சுட்டிக்காட்டி உள்ளார்.1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்தை உருவாக்கியிருந்தார். அதற்கு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி என பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த திறப்புவிழாவில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம், நடிப்புக்கு இலக்கணமான சிவாஜி கணேசனுக்கு மேடையில் இடம் கொடுக்கவில்லை.வேறு எந்த நடிகராக இருந்தாலும் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் சிவாஜி பெருந்தன்மையுடன் இவ்விழாவில் பங்கு பெற்றார். உலகில் மிகச்சிறந்த நடிகரான சிவாஜி கணேசனை, ஒதுக்கியது திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்தது.சில ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவை ஜெயலலிதா தலைமை ஏற்று நடத்தினார்.இந்தியாவில் எந்த ஒரு நடிகருக்கும் இதற்கு முன் இந்த மாதிரி ஒரு விழா நடந்தது கிடையாது. அவ்விழாவில் ரஜினி பேசிய போது, சிவாஜி கணேசனுக்கு பிலிம் சிட்டி திறப்புவிழா மேடையில் இடம் கொடுக்காததை கண்டித்தார். அதற்கு அனைவரும் ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.ஜெயலலிதாவை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கும் காலத்தில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்ற ரஜினியின் பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரஜினி இந்தப் பேச்சைக் கேட்ட ஜெயலலிதா மிகுந்த கோபம் அடைந்து அதன்பின் அவருக்கு பல பிரச்சினைகள் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • 937
    Added a news 
    தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” என்னும் காமெடி படத்தினை தயாரித்திருக்கிறார். கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டு இருக்கிறார். வீடியோ இதோ.....
    • 1001
    CINEMA News