Category:
Created:
Updated:
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. 77 நாடுகளில் அந்த வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நுழைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு நைஜீரியாவுக்கும், ஜப்பானுக்கும் சென்று வந்த 2 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 பேரில் ஒருவர் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்றும் மற்றவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் என்றும் சுகாதாரத்துறை துணைச்செயலாளர் மரிய ரொசாரியோ வெர்ஜியர் கூறி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், விமானத்தில் பயணித்தவர்களையும் தேடிக்கண்டுபிடிக்கும் வேட்டையை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கி விட்டுள்ளது.