Category:
Created:
Updated:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் வலைப்பாடு, கிராஞ்சி, பொன்னாவெளி, வேரவில் ஆகிய கிராமங்களின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வேரவில் கிராம மக்களடனான சந்திப்பும் நேற்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு வேரவில் பொது நோக்க மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த சந்திப்பில் வேலை ஆரம்பித்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பல்லவராயன் கட்டுச் சந்தி தொடக்கம் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பிலும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.