எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியினை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் பார்வையிட்டார்
கடந்த சனிக்கிழமை வெடிபொருட்களை அகற்றி கொண்டு செல்லும் போது மண் அணை பகுதியில் இருந்து துப்பாக்கிகளும் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இடம்பெற்ற துப்பரவு பணி நிறுத்தபட்டு பொலிசாருக்கம் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த பகுதி பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் குறித்த விடையம் பாரப்படுத்தபட்டது.இந்த நிலையில் நேற்று குறித்த இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி லெனிராஜ் கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுசன், பளை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் இராணுவத்தினர் கலோரஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.இன்றைய தினம் காலை 8 மணிக்கு அகழ்வு பணிகளை முன்னெடுப்பதாக தீர்மாக்க்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியினை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் பார்வையிட்டார்.துப்பரவு செய்யப்பட்ட பகுதியில் உள்ள எச்சங்களை பகுப்பாய்வு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.