Ads
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து வாயால் பாட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்கள் பலவற்றிலும் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. எனினும் சமீப காலங்களில் ஏற்கனவே பாடி பதிவு செய்யப்பட்ட இசையுடன் கூடிய ஆடியோக்களே நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்படுகிறது.
இதனால் மக்கள் எந்த தேச பற்று உணர்வுமின்றி வெறுமனே எழுந்து மட்டும் நிற்பதாகவும், வாயை கூட அசைப்பதில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் இனி அரசு விழாக்களில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை ஏற்கனவே பதிவு செய்து ஒலிப்பெருக்கிகளில் ஒலிபரப்பாமல், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடக் கூடியவர்களை வைத்து நேரடியாகவே பாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads