Category:
Created:
Updated:
உலக திசனம் (வேர்ள்ட்விசன்) நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சமூக சேவை திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணந்து நடத்திய 2021ம் ஆண்டுக்கான முதியோர் மற்றுத்திறனாளிகள் விழாவினை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து சாதித்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை கண்டாவளை பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் மாவட்ட அரசாங்க அதிபரினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.நிகழ்வில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.