சினிமா செய்திகள்
உடலுறவு குறித்து ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்
தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இதில் தனுஷ் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். அதில் ஒரு தனுஷூக்கு திரிஷாவும், ஒரு தனுஷூக்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
Ads
 ·   ·  7399 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மக்களின் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆன்மிக பயணத்தின் ஒரு அங்கமாக இன்று (5) நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதேன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக பாராளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது. அவற்றை கண்டிக்க வேண்டும். அதேபோல நாடாளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை ஏற்கமுடியாது. எனவேதான், பாாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை சபை அமர்வுகளை புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான நடவடிக்கை எவ்வாறு இடம்பெறும் என்பதை கட்சியின் பாராளுமன்றக்குழு தீர்மானிக்கும்.

குறிப்பாக பாராளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தற்போது நன்மதிப்பு இல்லை. எனவே, பாராளுமன்றத்துக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாராளுமன்றமும் வன்முறைக்களமாக மாறும் அபாயம் உள்ளது.

நிவாரணங்கள் கிடைக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு ஒரு வருடத்துக்குள்ளேயே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை." - என்றும் தெரிவித்தார். 

  • 415
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads