Category:
Created:
Updated:
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு செலுத்துவதற்கான கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது தொடர்பான எந்த திட்டமும் தற்போது அரசிடம் இல்லை. 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ளன. மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிப்பது மற்றும் தேவையான தரவுகளை வழங்குவதைப் பொருத்து தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் கூறினார்.
இந்திய பதிவாளர் ஜெனரல் தகவலின்படி, நாட்டில் 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 14,52,14,000 பேர் உள்ளனர்.